HeedYou

Breaking News

விண்டோஸ் 10 இல் ரிஃப்ரெஷ் செய்யகூடிய (ரைட் க்லிக் மெனு) வலது பட்டியலை வலது பக்கத்திற்கு மாற்றுவது எப்படி? Fix: Windows 10 Opens Right-Click Context Menu to Left Side in Tamil

விண்டோஸ் 10 இல் ரிஃப்ரெஷ் செய்யகூடிய வலது பட்டியலை இடது பக்கத்திற்கு மாற்றுவது எப்படி?



ஹாய், மீண்டும் வலைமகன் ஊடாக இன்னுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று நாங்கள் பார்க்க போவது நீங்கள் (கம்பியூடர்) கணினியில் விண்டோஸ் 10 பாவிக்க கூடியவர் என்றால் உங்களுக்கு தெரியும் அதில் நாம் ரைட் க்லிக் செய்து ரிஃப்ரெஷ் செய்ய கூடிய (மெனு) பட்டியல் இடது பக்கமாக தான் வரும். ஆனால் நாம் இதற்கு முன் பாவித்த எல்லா வின்டோஸ்களிலும் அந்த பட்டியல் வலது பக்கமாக தான் வரும். எனவே இது பலருக்கு எரிச்சலூட்டக்கூடியதாகவே இருக்கும் முக்கியமாக எனக்கும் அப்படி தான் இருந்தது, எனவே தான் அதை எவ்வாறு சரி செய்வது என்பதை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினித்தேன். 


சரி விடையத்திற்கு வருவோம், நீங்கள் செய்ய வேண்டியது சேர்ச் வின்டோஸில் போயி Run என டைப் செய்து கீழே புகைப்படத்தில் காட்டியது போன்று அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்யுங்கள். 



shell:::{80F3F1D5-FECA-45F3-BC32-752C152E456E}

இப்போ மேலே சிகப்பு எழுத்தில் உள்ள கோட் இனை கொபி செய்து கீழே புகைப்படத்தில் காட்டி இருப்பது போன்று பேஸ்ட் செய்து ஓகே பண்ணுங்கள்.


நீங்கள் அதை ஓகே செய்த பின் Tablet PC Settings என்ற பொக்ஸ் ஓபன் ஆகும் அதில் Other என்ற டெப் இனை க்லிக் செய்தால் கீழே உள்ள புகைப்படத்தில் போன்று தென்படும் அதில் Left-Handed என்பதை தெறிவு செய்து ஓகே பட்டனை க்லிக் செய்யுங்கள். 


இவ்வளவு தான் இனிமேல் நீங்கள் ரைட் க்லிக் செய்தால் வழமை போன்று பட்டியல் வலது புரமே காட்சி அளிக்கும். இறைவன் நாடினால் மீண்டும் இன்னுமொறு பதிவிள் உங்களை சந்திக்கிறேன். 


நான் அஷ்ஃபாக் ரிஷாட்


கருத்துகள் இல்லை